Wednesday, November 14, 2018

சம்பந்தனை பதறியடித்து தேடித்திரியும் வியாழேந்திரன்!


கூட்டமைப்பில் இணைய பலரின் ஊடாக முயற்சி செய்தும் அது வெற்றியளிக்காத நிலையில் ஆக குறைந்தது சம்பந்தனையாவது சந்தித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வியாழேந்திரன் உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆபத்தான ஒரு இக்கட்டான அரசியல் சூழலில் மகிந்தவின் பணத்திற்காக விலைப்போன வியாழேந்திரன் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார் என்றும் இப்படியான ஒருவர் கூட்டமைப்புக்கு தேவை இல்லை என்றும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் குழப்பகரமான நிலைமை இருந்து வருகின்றது. திடீரென பிரதமர் பதவி மகிந்தவிற்கு கொடுக்கப்பட்டு பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது.

பிரதமர் மாற்றப்பட்ட கையுடன் அடுத்தடுத்தாக அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நேற்றைய தினம் இன்று மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 122பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகிந்த - மைத்திரியின் புதிய அமைச்சரவையும் களைக்கப்பட்டு விட்டதாகவே அரசியல் ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

இவ்வாறு ஒரு இக்கட்டான சூழலில் எஸ்.வியாழேந்திரன் மீண்டும் எப்படியாவது கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சம்பந்தனை சந்திப்பதற்கு துடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புலிகள் பற்றிய டுவிட்டர் பதிவை அவசர அவசரமாக அழித்த கருணா!


நேற்று பாராளுமன்றில் பெரும் அமளி துமளி நடந்து கொண்டிருந்த நேரம் , மஹிந்த ராஜபக்சவின் சரியும் செல்வாக்குக்கு முண்டு கொடுக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் தளபதியும் மஹிந்த ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் பிரதி அமைச்சராக இருந்தவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். Karuna Deleted Tweets Sri Lanka Tamil News Latest

கடந்த 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பால் கட்டுநாயக்கா விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தாக்குதல் என்றும் அந்த ஒப்பந்தத்தில் புலிகளுடன் ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய அரசியல் வாதிகளும் சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அந்த பதிவு இடம்பெற்று இருந்தது.

Karuna Latest Tweet

எனினும் சில மணி நேரங்களில் குறித்த பதிவுகள் அழிக்கப்பட்டு உள்ளது.

மஹிந்த தரப்புடன் முட்டி மோதி வரும் ரணில் தரப்புக்கு சேறு பூசும் வகையில் கருணா கூறியிருந்த அந்த கருத்து அவருக்கு எதிராகவே திரும்பும் சாத்தியம் இருந்த காரணத்தால் அவர் அந்த பதிவை அழித்து இருக்கலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் பற்றிய உண்மைகளை அறிந்தவர் என்னும் வகையில் கருணா மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முடங்கினார் வியாழேந்திரன்! சம்பந்தனை தேடும் அவலநிலை!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை காண எஸ்.வியாழேந்திரன் பதறியடித்து கொண்டிருப்பதான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

கூட்டமைப்பில் இணைய பலரின் ஊடாக முயற்சி செய்தும் அது வெற்றியளிக்காத நிலையில் ஆக குறைந்தது சம்பந்தனையாவது சந்தித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வியாழேந்திரன் உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆபத்தான ஒரு இக்கட்டான அரசியல் சூழலில் மகிந்தவின் பணத்திற்காக விலைப்போன வியாழேந்திரன் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார் என்றும் இப்படியான ஒருவர் கூட்டமைப்புக்கு தேவை இல்லை என்றும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் குழப்பகரமான நிலைமை இருந்து வருகின்றது. திடீரென பிரதமர் பதவி மகிந்தவிற்கு கொடுக்கப்பட்டு பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது.

பிரதமர் மாற்றப்பட்ட கையுடன் அடுத்தடுத்தாக அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்றைய தினம் இன்று மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 122பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகிந்த - மைத்திரியின் புதிய அமைச்சரவையும் களைக்கப்பட்டு விட்டதாகவே அரசியல் ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

இவ்வாறு ஒரு இக்கட்டான சூழலில் எஸ்.வியாழேந்திரன் மீண்டும் எப்படியாவது கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சம்பந்தனை சந்திப்பதற்கு துடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம்


மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதை அடுத்து, சிறிலங்கா அரசியல் குழப்பங்கள் மேலும் மோசமடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட, பிரேரணைக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களை சந்திக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 8.30 மணிக்கு, ஐதேகவினரை சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், உறுதி செய்திருந்தார்.

ஆனால், நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து, நிலைமைகள் மேலும் குழப்பமடைந்துள்ளன.

சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரில் இன்று காலை அவருடன் நடத்தவிருந்த சந்திப்பை நிறுத்தியுள்ளதாகவும், அவரைத் தாம் சந்திக்கச் செல்லமாட்டோம் என்றும் ராஜித சேனாரத்ன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போதைய குழப்பங்களுக்கு முடிவு கட்டும் முயற்சிகளில் மேலும் சிக்கலடைந்துள்ளன.

ரணிலுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள மைத்திரி!


பரபப்பான சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து பேசவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து 113 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் வருமாறு ஜனாதிபதி, ரணிலுக்கு அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விசேட செய்தி ! பிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி - தொடர்கிறது நெருக்கடி !
“சஜித் பிரேமதாச , கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் மீண்டும் ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன். இப்போதுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணவேண்டுமானால் இதனை பரிசீலிக்குமாறு  சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லுங்கள்”

இப்படி இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

கட்சித் தலைவர்களான மனோ கணேசன் , ரவூப் ஹக்கீம் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்..

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு எப்படியான தீர்வை எடுப்பது என்பதை பற்றி இந்த சந்திப்பில் தீவிரமாக பேசப்பட்ட போதும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை...

எனினும் இந்த சந்திப்பின் பின்னர் அலரி மாளிகைக்கு வந்த மேற்படி தலைவர்கள் மூவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.. 

எவ்வாறாயினும் இன்று பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நாளை  காலை பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்..
இதில் ரணிலும் கலந்து கொள்ளவுள்ளார்..

தற்போதைய அரசியல் நெருக்கடியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை முன்மொழிவதென்றும் அதற்கு ஆதரவான எம் பிக்களின் கையொப்பம் அடங்கிய மனுவை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கவும் ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது..

Sivarajah anna

விசேட செய்தி ! கட்சித்தலைவர்கள் அதிரடி !
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான இன்றைய காலைச் சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஆதரித்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை இன்று காலை சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரி அழைத்திருந்தார்.

அதேசமயம் ,நேற்று நாடாளுமன்ற தீர்மானங்கள் தொடர்பில் விளக்கி சபாநாயகர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி மைத்ரி நேற்றிரவு கடுமையான பதில் கடிதமொன்றை வழங்கியிருந்தார்...

இதனையடுத்து நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சி தலைவர்கள் , ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு செல்வது அர்த்தமற்றதென்பதால் அதனை புறக்கணிக்க தீர்மானித்தனர்.

நிறைவேற்றதிகாரத்திற்கும் நாடாளுமன்றத்திற்குமிடையிலான நெருக்கடி தொடர்கிறது..

Sivarajah anna

🙏

யாழில் 4 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!


4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

4 வயது பெண் குழந்தை அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை 21ஆம் நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைக்கு அந்தரங்க உறுப்பிலிருந்து குருதி வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். பெண் குழந்தை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டதும் தாயார் தனது குழந்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். எனினும் சம்பவம் தொடர்பில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியசாலையின் பணியாளர்களும் தாயாரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு விழிப்பாக உள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையைச் சேர்க்கும் போது தாயார் வழங்கிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

“குழந்தையின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். தாயாரின் நடத்தை தவறானது. அவருடன் தொடர்புள்ளவரே குழந்தையைத் துன்புறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இருந்த இடம் தெரியாமல் போன வியாழேந்திரன்


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை பல கட்சிகளினதும் பிரதிநிதிகள் அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான, அண்மையில் மைத்திரி - மகிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக் கொண்ட வியாழேந்திரன் புலப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் மகிந்தவின் பக்கம் உறங்கிய முகத்துடன் இருந்தார், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலும் அவர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனினும் வியாழேந்திரன் பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட போது பல ஊடகங்களின் முக்கியச் செய்திகளில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று இருந்த இருந்த இடம் தெரியாமல் போன சோகக் கதை....

இதேவேளை இன்றைய தினம் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட இருவர் தமது அமைச்சுப் பதவிகளை துறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் இன்று மகிந்தவின் உரை! தொடரும் அரசியல் குழப்பம்!