விமான விபத்து: வீழ்ந்து நொருங்கிய
இலங்கை விமானப்படையின் விமானம்..!
பயிற்சியாளர் உட்பட இருவர் மரணம்!
விமானப்படையின் பயிற்சி விமானம்
ஒன்று சின்னவராய முகாம் பகுதியில்
விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானப்படை சீனவராய கல்லூரியில்
அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும்
பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு
பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட
PT 6 ரக விமானமே இவ்வாறு
விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை
விமானப்படை அறிவித்துள்ளது.
இன்று (07) முற்பகல் 11.25 மணியளவில் சீனாவராய விமானப் பாதையில் இருந்து விமானச் சோதனைக்காகப் புறப்பட்ட விமானம் முற்பகல் 11.27 மணியளவில் விமானப்படைத் தளம் சீனாவராய பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமான சோதனைக் கடமைகளுக்காக அங்கு பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment