பேஸ்புக் காதலியின் வடிவத்தில் பொறி; ஒரு வருட சபதம்… மயிரிழையில் தப்பித்த இளைஞன்: இலங்கை பாதாள உலககுழுக்களின் பழிவாங்கும் தாக்குதல்கள்! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Sunday, August 6, 2023

பேஸ்புக் காதலியின் வடிவத்தில் பொறி; ஒரு வருட சபதம்… மயிரிழையில் தப்பித்த இளைஞன்: இலங்கை பாதாள உலககுழுக்களின் பழிவாங்கும் தாக்குதல்கள்!



சனிக்கிழமை (5) வெலிவேரிய, எம்பரலுவ சந்திக்கு அருகில் ஜூபிலி மாவத்தையில் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பழிவாங்குவதற்காக டுபாயை சேர்ந்த ‘கெஹல்பத்தர’ பத்மே சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்தின் முன்னர் கம்பஹா, கெஹல்பத்தரவில் உள்ள சலூனில், இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

சனிக்கிழமை, வெலிவேரிய, எம்பரலுவ சந்திக்கு அருகில் உள்ள ஜூபிலி மாவத்தையில் காரில் வந்த 24 வயதான நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பேஸ்புக்கில் அறிமுகமான அழகான யுவதியொருவர், சந்திக்கலாம் என கூறியதையடுத்து, ஆசையாக ஓடிவந்தவர் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ஓகஸ்ட் 5, 2022 அன்று சலூனில் கொல்லப்பட்ட இளைஞருக்கு 22 வயது. ‘கெஹல்பத்தர’ பத்மாவின் உறவினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், அந்த தோட்டா சலூனில் இருந்த இளைஞரைத் தவறுதலாகத் தாக்கியது.

கொல்லப்பட்ட இளைஞன் பாதாள உலகத்துடன் அல்லது குற்றச்செயல்களுடன் தொடர்பில்லாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஓராண்டுக்குள் பழிவாங்கப் போவதாக ‘கெஹெல்பத்தர’ பத்மே தனது அடியாட்கள் சிலரிடம் தெரிவித்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இளைஞன் கொல்லப்பட்டு சரியாக ஒரு வருடத்தின் பின்னர், சனிக்கிழமை (5) வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ‘பாஸ் போட்டா’ கொலைக்கு பழிவாங்கும் வகையில் சலூனில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது துபாயில் இருக்கும் மகிழங்கமுவே சஞ்சீவ என்ற பாதாள உலக தலைவரின் அடியாளான ‘பாஸ் போடா’ போட்டிக்குழுவொன்றினால் கொல்லப்பட்டார். பாஸ் போட்டாவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் மகிழங்கமுவே சஞ்சீவவினால் பல கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.

சலூனில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பஹா பொலிஸார், பலரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் உதவியிருந்தனர். சந்தேக நபர்களில் பாஸ் போடாவின் சாரதியான 24 வயதுடைய ‘வேகே பட்டா’ என அழைக்கப்படும் இளைஞரும் அடங்குவார்.

அவரே கடந்த சனிக்கிழமை வெலிவேரியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சலூன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், வெலிவேரியவிற்கு அழைக்கப்பட்ட பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

முகநூல் ஊடாக நட்பாக பழகிய அழகிய யுவதி ஒருவரே இவரை வெலிவேரியவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை சந்திப்பதற்காக வாகனத்தில் பயணித்த நபரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த யுவதியுடன் பேஸ்புக்கில் நட்பாக இருந்ததாகவும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு முந்தைய நாள், இருவரும் சந்திக்கலாமென யுவதி கூறியதாகவும், அழைப்பின் பேரில் யுவதியை தேடிச் சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த முழு நடவடிக்கையும் ‘கெஹெல்பத்தார பத்மே’யின் வேலையாகத் தெரிகிறது என்று மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இந்த நபரை குறிவைத்து இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. முதல் சூடு கையில் பட்டது. இரண்டாவது தோட்டா குறி தவறியது. மூன்றாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் கொழும்பு – கண்டி வீதியில் பயணித்த லொறி ஒன்றை நிறுத்தி  அதன் பின்பகுதியில் பயணித்துள்ளனர். பின்னர் கொழும்பு நோக்கி பயணித்த அவர்கள் கடவத்தைக்கு அருகில் இறங்கிய பின்னர் தடயமே இல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவரின் கைவிரல்களில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், அவருக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மகிழங்கமுவே சஞ்சீவவிடமிருந்து பதிலடி நடவடிக்கையை எதிர்பார்க்கலாம் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad