6 மாதம் இலத்திரனியல் பொருட்களை பாவிக்க தடை: அப்பிளுக்குள் ஊடுருவிய ஹக்கருக்கு தண்டனை! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Monday, December 23, 2019

6 மாதம் இலத்திரனியல் பொருட்களை பாவிக்க தடை: அப்பிளுக்குள் ஊடுருவிய ஹக்கருக்கு தண்டனை!


அப்பிள் நிறுவனத்தின் 300 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளிற்குள் ஊடுருவி முடக்கியதற்காக அந்நிறுவனத்திடம் ஹக்கர் மன்னிப்புக் கோரினார்.

துருக்கியைச் சேர்ந்த ஹக்கர், இப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான 300 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளை வைரஸ் மூலம் ஊடுருவி அதன் பயன்பாட்டாளர்கள் ஐ கிளௌடில் சேமித்து வைத்திருந்த தகவல்களை முடக்கி, அதனை அழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தனது தவறுக்காக அப்பிள் நிறுவனத்திடம் அந்த ஹக்கர் மன்னிப்புக் கோரினார்.

முன்னதாக, கிரிம் அல்பைரக் எனும் அந்த ஹேக்கர், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், ஹார்ட் டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவருக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 300 மணிநேரங்களுக்கு ஊதியம் இல்லாமல் உழைக்க வேண்டும் மற்றும் 6 மாதங்களுக்கு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தவும் தடை விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad