தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் தலைமறைவு! நீதிமன்றம் விடுத்த உத்தரவு - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 24, 2019

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் தலைமறைவு! நீதிமன்றம் விடுத்த உத்தரவு


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமையை எதிர்த்து நாளை மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் பூரண ஹர்தால் அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விட்டிருந்தார்.

இந்நிலையில் எறாவூர் பொலிஸார் இந்த ஹர்த்தாலால் மாவட்டத்தில் ஒரு குழப்பகரணமான சூழலை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இதனால் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த மாதம் ஒரு காணிப்பிரச்சனையில் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார் என தமிழர், உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனுக்கு எதிராக இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதி மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை காலை 9 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad