மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு. - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 15, 2020

மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு.



நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 

அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.

நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன். 

வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது.. 


இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன. 

அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது. 

எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை. 

வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது. 

என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது. 

சாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.

நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். 

அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன். 

அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது. 

செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட  நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன. 

பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன். 

இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான். 

மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன. 

வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன். 

திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது. 

ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது. 

கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது. 

ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.

முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.. 

பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர். 

அதைத்தான்  அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே. 


என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது. 

நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன். 

ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார். 

கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன். 

அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.

ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது. 

அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள். 

அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன. 

நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன். 

அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.  

திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன்.

மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர். 

அவர்கள் அதிக அளவில் ஒரு துளி  நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.

டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார். 

அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார். 

இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார். 


இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர். 

மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.

கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது. 

இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது. 

அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று 
டிக்கெட் செக்கர் சொன்னார். 

அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார். 

ரயில் தன் பயணத்தை துவக்கியது. 

ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது.. 

எங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது. 

ஒரு லிட்டர் பீர் தயாரிக்க 
சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. 

அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 

அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். 

பீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை. 

ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம். 

ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.

கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –  

இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும். 

சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால்  நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன். 

அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது. 

இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.

நமக்கு இந்த நிலை. வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம் என்று எவனாது சொன்னான்?இலவசம் வேன்டாம் நமது  பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம் கல்வி தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்,
தயவு செய்து தண்ணீரை வீணாக்காமல் உபயோகிப்போம், நமது சந்ததிகளின் நல்வாழ்வுக்கு
வழிவகுப்போம்

No comments:

Post a Comment

Post Top Ad