வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பகுதிக்கு விரைவில் முக்கிய திட்டம் - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Monday, February 11, 2019

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பகுதிக்கு விரைவில் முக்கிய திட்டம்

   
   
   
  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.


இது தொடர்பான கருத்திட்டமுன்மொழிவு பிரதமரினால், தேசியகொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் என்றவகையில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கரையோரமாக இணைக்கும் கொக்கிளாய் பாலம் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலையில் புல்மோட்டையை இணைக்கும் பாலமாக கொக்கிளாய் ஏரியில் அமையவுள்ளது.

இந்தநிலையில் அதற்கான கடன் உடன்படிக்கை கலந்துரையாடல் செக்குடியரசின் ஏற்றுமதி வங்கியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

   
   
   
 

இதற்கான செலவு அண்ணளவாக 9 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோமீற்றர் நீலம் கொண்ட இந்த பாலமானது முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் உள்ள பிரயாணதூரத்தினை 100 கிலோ மீற்றரால் குறைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மூன்று வருடகாலப் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad