இரணைமடு குளத்தில் அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்தார் வடக்கு ஆளுனர் - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 10, 2019

இரணைமடு குளத்தில் அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்தார் வடக்கு ஆளுனர்

   
   
   
 

இரணைமடு குளத்தில் அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்தார் வடக்கு ஆளுனர்
இரணைமடு குளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்ததிற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறித்தலை விடுத்துள்ளார்.

இக் குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இக் குழுவில் ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு ஒன்றின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன மற்றும் ஆளுநரின் சிபார்சுக்கு அமைய மொறட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதனால் அக் குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad