சந்திர கிரகணத்துடன் கூடிய சூப்பர் ப்ளட் மூன் அதிசய நிகழ்வு! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 16, 2019

சந்திர கிரகணத்துடன் கூடிய சூப்பர் ப்ளட் மூன் அதிசய நிகழ்வு!


இந்த மாதம் 20ஆம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை ‘வுல்ஃப் மூன்’ என அழைத்து வருகின்றனர்.

இந்த ‘வுல்ஃப் மூன்’ எதிர்வருகின்ற 20-ம் மற்றும் 21-ம் தேதிகளில் நிகழுமென வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்திய நேரப்படி இந்த மாதம் 20ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பமாகி அடுத்த நாள் காலை வரை இது நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆபிரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் பல இடங்களிலும் இந்த ‘சூப்பர் ப்ளட் மூன்’ தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் வானில் நிகழும் முதல் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ஆம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது சூரியனிலிருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு பூமியின் நிழலானது நிலவின் மீது விழும்.

இதன் காரணமாக, நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த நிகழ்வினை ‘ப்ளட் மூன்’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad