இன்று உலகளவில் நவ நாகரீகத்தின் அடையாளமாக பீட்சா என்னும் ரொட்டி வகை உணவு மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் பிரபலமடைந்துள்ளது.
சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டு பிரியர்களையும் சுண்டி இழுக்கு இந்த பீட்சா உருவான வரலாறு பற்றி பார்ப்போம்,
பீட்சா ஒரு இத்தாலிய உணவாகும். லத்தின் மொழி சொல்லான ’பின்சா’ என்பதிலிருந்து தான் ’பீட்சா’ என்னும் சொல் வந்ததாக நம்பப்படுகிறது.
1889 வருட காலகட்டத்தில் தென்மேற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள் பிராந்தியத்தை சேர்ந்த மக்கள் கடும் உழைப்பாளிகளாக இருந்தார்கள்.
அவர்கள் வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் தட்டையான ரொட்டி போன்ற உணவை விருப்பி உண்பார்கள்.
அப்படி ஒரு நாள் அவர்கள் உண்ணும் போது அவர்கள் இருப்பிடம் வழியே நகர்வலம் வந்த இத்தாலி ராணி மெர்கரிட்டா பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.
தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனாராம்.
உடனே தனது சமையல்காரரிடம் அந்த உணவை இன்னும் மெறுகேற்றி செய்ய அவர் உத்தரவிட அந்த சமையல்காரர் சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத்துளசி போன்றவற்றை ரொட்டியின் மேலே தூவி மிக சுவையான உணவாக அதை உருவாக்கினாராம்.
பின்னர் அதற்கு ராணியின் பெயரான மெர்கரிட்டாவுடன் பீட்சாவையும் சேர்த்து மெர்கரிட்டா பீட்சா என பெயர் வைத்தனர்
ராணியே அதை விரும்பி சாப்பிட்டதால் அந்த பீட்சா உணவை பற்றி மெல்ல மெல்ல மற்ற நாடுகளும் பின்னர் அறிந்து கொண்டன.
எல்லோருக்கும் அந்த சுவை பிடித்து போக பலருக்கு பிடித்த உணவாக பீட்சா மாற தொடங்கியது. பின்னர் கடைகளிலும் அதை தங்கள் திறமையால் அதன் சுவையை இன்னும் மெறுகேற்றி விற்பனை செய்ய தொடங்கினார்கள்.
கடைக்கு நேரில் சென்று தான் வாங்க வேண்டும் என்றிருந்த பீட்சாவை போன் செய்தால் வீட்டுக்கே கொண்டு வரும் பழக்கம் 1960 ஆம் ஆண்டு உருவானது. பீட்சா என்ற சொல்லை மொழி பெயர்க்க தேவையில்லை. உலகில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அச்சொல்லை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே பீட்சா உலகளவில் எந்தளவு இன்று பிரபலமடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
No comments:
Post a Comment