யாழ்ப்பாணத்தில் காதலியின் கர்ப்பத்தை அழிக்க காதலன் செய்த கொடூரம் - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Thursday, January 24, 2019

யாழ்ப்பாணத்தில் காதலியின் கர்ப்பத்தை அழிக்க காதலன் செய்த கொடூரம்


காதலித்து கர்ப்பமாக்கிய தனது முன்னாள் காதலி நிறைமாதமாக இருக்கும் நிலையில், அவரது வயிற்றில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார் முன்னாள் காதலர். முன்னாள் காதலிக்கு குழந்தை பிறந்தால் சட்டசிக்கல்களை சந்திக்க வேண்டுமென்பதற்காகவே இந்த வெறிச்செயலை செய்துள்ளார்.

தென்மராட்சியின் கெற்பெலியில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த பெண்ணை வாலிபர் ஒருவர் சில மாதங்களாக காதலித்துள்ளார். அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருந்து, அந்த பெண் கருவை சுமந்துள்ளார். இதை தெரிந்த பின்னர், அந்த பெண்ணை அவர் கைவிட்டுவிட்டார்.

இதையடுத்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனைகளிற்காக அந்த பெண் சென்றுவிட்டு, வீடு திரும்பினார். வீதியில் அந்த பெண்ணை வழிமறித்த முன்னாள் காதலன், மண்வெட்டி பிடியால் அந்த பெண்ணின் வயிற்றில் பலமாக தாக்கியுள்ளார். அவலக்குரல் எழுப்பியபடி பெண் வீதியில் விழுந்து துடித்தபோதும், முன்னாள் காதலன் தப்பியோடி விட்டார். இதையடுத்து அந்த பகுதியில் வந்தவர்கள் அவசர நோயாளர்காவு வண்டிக்கு தகவல் அனுப்பி, பெண்ணை சாவகசசேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்

விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொடிகாமம் பொலிசார், தலைமறைவாகியுள்ள முன்னாள் காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad