கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Sunday, January 13, 2019

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்


   
   
   
  வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுள் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் மதி ​என்ற பெயரால் அழைக்கபடுபவரென்றும் குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராரேந்திரனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும் கொட்டாஞ்சேனை- செல்லையா தோட்டத்தில் இடம்பெற்று வரும் ஹெரோய்ன் போதை வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad